அறிவியல் மட்டும் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தியாவில் SERB-POWER திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் R&D ஆய்வகங்களில் பல்வேறு S&Tதிட்டங்களில் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி நிதியில் பாலின வேறுபாட்டை குறைப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்தத் திட்டத்தின் படி 35 முதல் 55 வயது உடைய பெண் ஆராய்ச்சியாளர்களுக்கு மாதம் தோறும் 15 ஆயிரம் ரூபாய் வீதம் 25 பேருக்கு உதவி தொகை வழங்கப்படும். மேலும் வருடத்திற்கு 10 லட்சம் விகிதம் ஆராய்ச்சி நிதியும் வழங்கப்படும். இந்த திட்டம் குறித்து கூடுதல் தகவல்களை அறியவும் பயன்பெறவும் https://www.serbonline.in/SERB/serbPowerInstructions என்ற இணையதளத்தை அணுகவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.