சேலம் மாவட்டதில் கடந்த 2018 ல் மகனை கொலை செய்த தாய்க்கு தற்போது வழக்கு முடிவுக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மைனாவதி. இத்தம்பதிகளுக்கு சசிகுமார் என்ற மகன் இருந்துள்ளான். இந்நிலையில் மைனாவதிக்கும், அந்தப் பகுதியில் வசிக்கும் தேவராஜ் என்ற இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதனையடுத்து அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்கள். மேலும் கள்ளக்காதலுக்கு மகன் சசி குமார் இடையூராக இருக்கிறார் என நினைத்து மகனை கொலை செய்ய மைனாவதி திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு தனது மகன் சசிகுமாரை அந்தப் பகுதியிலிருக்கும் கிணற்றிற்க்கு அழைத்துச் சென்று கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலனான தேவராஜ் மற்றும் மைனாவதி இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணை மகளிர் கோர்ட்டில் நடைபெற்று விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கிடைத்தது. அந்த தீர்ப்பில் மகனை கொலை செய்த குற்றத்திற்காக மைனாவதிக்குஆயுள் தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அதன் பின் தேவராஜ் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.