Categories
உலக செய்திகள்

ஆயிரக்கணக்கான மக்களை கொன்ற நீங்க…. புதினை இப்படி சொல்லலாமா?…. அமெரிக்காவுக்கு ரஷ்யா கண்டனம்….!!!!

கடந்த 16ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை “போர்க்குற்றவாளி” என்று அறிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “அமெரிக்க அதிபர் தனது குண்டுகளால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்துள்ளார். அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை ‘போர்க் குற்றவாளி’ என்று கூறுவது ஏற்புடையது அல்ல. இது மன்னிக்கத்தக்கது அல்ல” என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு அமெரிக்க நாடாளுமன்றம் ‘ரஷிய அதிபர் புதின் ஒரு போர்க் குற்றவாளி’ என்ற தீர்மானத்தை ஏக மனதாக நிறைவேற்றியது. இந்நிலையில் புதினை அதிபர் பைடனும் அதே வார்த்தையால் கண்டித்து பேசியுள்ளார். ரஷ்ய அதிபர் புதினை உலகத் தலைவர்கள் பலரும் ‘போர்க் குற்றவாளி’ என்று கூறி வந்தனர். இருப்பினும் அமெரிக்க அதிபர் பைடன் மட்டும் புதினை போர்க்குற்றவாளி என்று கூற தயக்கம் காட்டி வந்தார்.

அதேபோல் போர்க்குற்றவாளி என்று அழைக்க சர்வதேச விசாரணைகளும் அவசியம் என்று கருதினார். இந்த நிலையில் அமெரிக்காவுக்கு தொலைக்காட்சி காட்சிகளின் தொகுப்பு வாயிலாக ‘ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரேனிய குடிமக்கள் படும் துயரம்’ காட்டப்பட்டது. இந்த வீடியோவை பார்த்து ஆடிப்போன அதிபர் பைடன், ரஷ்ய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து முதன் முறையாக அவரை ‘போர்க் குற்றவாளி’ என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

Categories

Tech |