ட்விட்டர் நிறுவனம் தன்னுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்ததையடுத்து, தற்போது பேஸ்புக்கின் தலைமை நிறுவனமான மெட்டா ஆயிரம் கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் காலாண்டு லாபம் கடந்த வருடத்தை விட 52 சதவீதம் குறைந்து 4.4 பில்லியன் டாலராக சரிந்தது. இதனால் அதனுடைய மொத்த மதிப்பு 600 அமெரிக்க டாலராக உள்ளது.
இந்த நிலையில் அதன் பங்கு விலையும் ஒரே நாளில் 25% சரிவை கண்டுள்ளது. இதையடுத்து மெட்டாவில் புதிதாக பணியாளர்களை நியமிப்பதை நிறுத்தி வைத்துள்ள மெட்டா, தற்போது பல்வேறு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.