நாமக்கல்லில் மொத்த கொள்முதல் விற்பனையில் முட்டையின் விலை 20 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 85 காசுகளுக்கு விற்பனையாகிறது.
தொடர் மழை மற்றும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்ததால் பொதுமக்கள் கலக்கம் அடைந்தனர்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தின் மொத்த கொள்முதல் விற்பனையில் முட்டையின் விலையை 20 காசுகள் உயர்த்தி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு விலை நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி, மொத்த கொள்முதல் விற்பனையில் முட்டையின் விலை 20 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 85 காசுக்கு விற்பனையாகிறது.