ஆம்பூர் பிரியாணி என்றாலே அனைவருக்கும் நாவில் எச்சில் ஊறும். ஆம்பூர் பிரியாணி ரசிக்கவே நாக்கிற்கு கொடுப்பினை இருக்க வேண்டும் என்பார்கள் அசைவ பிரியர்கள். கீழ் நிலையில் ஸ்பெயின் நாட்டில் நடக்கும் தக்காளி திருவிழாவின் மாடலில், ஆம்பூர் பகுதியில் இருந்து அனைத்து பிரியாணி கடை கைகளையும் ஒன்று சேர்த்து பிரியாணி திருவிழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்திருக்கிறது மாவட்ட நிர்வாகம்.
அதன்படி ஆம்பூர் வர்த்தக மையத்தில் வருகிற நாளை முதல் 15ம் தேதி வரை பிரியாணி திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாகவும், மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டதாலும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.