Categories
தேசிய செய்திகள்

ஆமா!…. “நான் இதை மறுக்கவில்லை”…. மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு…. சரத்பவார் சொன்ன பரபரப்பு தகவல்….!!!!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மீது முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் டுவிட்டரில் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார். குறிப்பாக 1992ஆம் ஆண்டில் சரத்பவார் முதல்-மந்திரியாக இருந்த சமயத்தில் மும்பையில் குண்டு வெடிப்பு தொடர்ந்து நடந்தது. அப்போது சரத்பவார் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதியில் குண்டு வெடிப்பு நடந்ததாக பொய் கூறியதாக தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். மேலும் ஜாதிய அரசியலில் சரத்பவார் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள சரத்பவார், “இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதியில் குண்டு வெடிப்பு நடந்ததாக நான் கூறியதை மறுக்கவில்லை. சித்தி விநாயக் போன்ற இந்துக்கள் அதிகம் நிறைந்த 11 பகுதிகளில் தான் குண்டு வெடித்திருந்தது. இந்த தாக்குதல் மூலம் பாகிஸ்தான், இந்தியாவில் உள்ள இந்து-முஸ்லிம்கள் இடைய கலவரத்தை தூண்ட திட்டமிட்டிருந்ததை உணர்ந்தேன். எனவே குண்டு வெடிப்பு சம்பவம் முகமது அலி ரோட்டிலும் நடந்ததாக கூறினேன். இதனால் இந்து-முஸ்லிம் இடையே ஏற்பட இருந்த கலவரம் தடுக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |