புதுச்சேரியில் கொலை வழக்கில் சிறுவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள குபேரர் அங்காடியில் பூக்கடை ஒன்று அமைந்துள்ளது. அந்த கடையில் சிவபாலன்(19) மற்றும் பாலாஜி(23) ஆகிய 2 பேர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கடையில் நேற்று அதிகாலை அருளானந்தம்(38) என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து போலீசார் அந்த இரு சிறுவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளனர்.
மேலும் மது அருந்தும் போது ஏற்பட்ட வாய் தகராறில் அவரை கொலை செய்ததாகவும், அந்த சிறுவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து நீதிபதி வீட்டில் இருவரும் ஆஜர்படுத்தி அதன் பின்னர் கலாப்பாட்டில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டுள்ள பாலாஜி என்பவர் ஏற்கனவே திருட்டு வழக்கில் ஆண்டு சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனை தொடர்ந்து பேட்டியளித்த காவல் ஆய்வாளர் கண்ணன், இரவு 10 மணி முதல் அதிகாலை நான்கு மணிவரை யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை எனவும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.