நடிகர் விஷால் தான் ஒருவரை காதலிப்பது பற்றி கூறிய நிலையில் அதைக் கேட்ட ரசிகர்கள் இன்பதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வளம் வருகின்றார் விஷால். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் படங்களை தயாரித்தும் வருகின்றார். இவர் முதலில் வரலட்சுமி சரத்குமாரை காதலித்தார். இருவருக்கும் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களின் காதல் பிரிவில் முடிந்தது.
பின் தெலுங்கு நடிகை அனுஷாவை காதலித்து நிச்சயதார்த்தமும் சென்ற 2019 ஆம் வருடம் நடந்தது. ஆனால் நிச்சயம் முடிந்த ஆறு மாதங்களிலேயே அவர்கள் பிரிந்து விட்டார்கள். இதனால் விஷால் தனது கெரியரில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நிலையில் ரசிகர்கள் வயது ஏறிக்கொண்டு போகிறது அண்ணா… சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணுங்க என கூறி வருகின்றார்கள்.
இந்த நிலையில் விஷால் கூறியுள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்திருக்கின்றது. விஷால் கூறியுள்ளதாவது, அப்பா அம்மா பார்த்து செய்து வைக்கும் திருமணத்துல நான் செட்டாவேனா என தெரியவில்லை. உங்களிடம் ஏன் பொய் சொல்ல வேண்டும். ஆமாம், லவ் பண்றேன். அந்த பொண்ணு யார் என்ற கேள்விக்கு மட்டும் கொஞ்சம் பொருத்திருந்து பதில் கூறுகிறேன் எனக் கூறியுள்ளார்.