Categories
தேசிய செய்திகள்

ஆப்பிள் 11 ப்ரோவில் தவறாக பொறிக்கப்பட்டுள்ள லோகோ… அதனால் இதற்கு விலை 2 லட்சம்…!!

தவறான லோகோவுடன் பொருத்தப்பட்டிருந்த ஐபோன் 11 ப்ரோ கைப்பேசி ரூ.2 லட்சத்துக்கு மேல் விற்பட்டுள்ளது. ஆப்பிள் சாதனங்களில் லோகோ பிழையுடன் வருவது மிக மிக அரிதானது. தவறாக பொறிக்கப்பட்ட ஆப்பிள் லோகோவின் புகைப்படம் கொண்ட ஐபோன் 11 ப்ரோ சாதனத்தை ஒருவர் இந்திய மதிப்புப்படி ரூ.2 லட்சத்துக்கு வாங்கியுள்ளார். மேலும் தற்போதைய ஆப்பிள் சாதனமான ஐபோன் 12 ப்ரோ மேக்ஸை விட இது அதிக விலை ஆகும்.

பல்வேறு பிரத்யேக அம்சங்களோடு ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து சந்தையில் அறிமாகிக் கொண்டே இருந்தாலும் கூட ஐபோன்களுக்கு என தனி வரவேற்பு எப்போதும் இருக்கிறது. இதற்கு பிரதான காரணம் ஐபோன் வடிவமைப்பு, டிசைன், கேமரா, பாதுகாப்பு அம்சம், செயல்திறன் உள்ளிட்ட அனைத்திலும் முக்கிய கவனம் செலுத்துவதாகும். ஆப்பிள் நிறுவனம் தங்களது ஐபோன் சாதனங்களுக்கு உறுதியான உத்தரவாதத்தை வழங்குகிறது. இருப்பினும் மிகவும் அரிதாக ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளில் பிழை ஏற்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ சாதனத்தில் பின்புற லோகோ தவறாக அச்சிடப்பட்டுள்ளது. இதை ஒருவர் ரூ.2 லட்சத்துக்கு வாங்கியுள்ளார். ஐபோனின் பின்புறத்தில் லோகோ தவறான இடத்தில் அச்சிடப்பட்டிருக்கிறது. மையப்பகுதிக்கு மாறாக வலதுபுறத்தில் தள்ளி சாய்வாக பொறிக்கப்பட்டிருக்கிறது. ஐபோன் சாதனத்தை குறிப்பிட்ட கோணத்தில் வைத்து அதன் பின்புறத்தை பார்த்தால் இந்த குறைபாடு காணமுடியும். ஆப்பிள் ஐபோன் சாதனங்களில் இதுபோன்ற தகவல் நடப்பது என்பது மிக அரிது.

Categories

Tech |