சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுனத்தை ஆக்கிரமிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் இந்த கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் விளைவாக இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்துவதில் சற்று காலதாமதம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐபோன் 12 ஸ்மார்ட்போனுக்கு தேவையான OLED என்ற திரையை சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ஆப்பிள் நிறுவனம் 4 வகையான ஐபோன் 12 ஸ்மார்ட்போன்களை வடிவமைத்து அறிமுகப்படுத்த உள்ளது. இந்த நான்கு வகை ஸ்மார்ட்போன்களுக்கும் தேவைப்படும் 80 சதவீத OLED தொடுதிரைகளை சாம்சங் நிறுவனமே ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்க உள்ளது. மீதமுள்ள 20 சதவீத தொடுதிரைகளை ஆப்பிள் நிறுவனமே வடிவமைக்கப்போவது குறிப்பிடத்தக்கது.