மிசோரம் மாநிலம் மேற்கு வங்காள தேசம் மற்றும் கிழக்கே மியான்மர் நாட்டுடன் சர்வதேச எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றது. இந்த நிலையில் நடப்பாண்டில் பிப்ரவரியில் மிசோராம் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து பல நாடுகள் மற்றும் அது சார்ந்த இறைச்சிப் பொருட்கள் இறக்குமதியை மிசோரம் அரசு ஏப்ரல் மாதத்தில் தடைசெய்துள்ளது. கடந்த வருடத்தில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலுக்கு மிசோராமில் 33 ஆயிரத்து 417 பன்றிகள் உயிரிழந்து ரூபாய் 60.82 கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தவிர காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு அதே வருடத்தில் மொத்தம் 10,910 பன்றிகள் கொல்லப்பட்டது.
கடந்த வருடம் டிசம்பரில் எந்த காய்ச்சலும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் நடப்பாண்டில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலால் 4,848 பன்றிகள் உயிரிழந்திருக்கின்றனர். மிசோரம் விலங்குகள் வளர்ப்பு மற்றும் கால்நடைத்துறை நேற்று அறிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பாதிப்பினால் 39 பன்றிகள் உயிரிழந்திருப்பது என்றும் தெரிவித்துள்ளது. காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்துவதற்கு இதுவரை 4077 பன்றிகள் கொல்லப்பட்டுள்ளது. இதனால் மிசோரோம் 11 மாவட்டங்களில் இதுவரை 9 மாவட்டங்களில் உள்ள 68 கிராமங்கள் இதுவரை பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் மாநில பேரிடர் ஆக இது அறிவிக்கப்படும் என அந்தத் துறைக்கான மந்திரி டாக்டர் பெய்ச்சுவா தெரிவித்துள்ளார்.