மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு மூன்று டன் மருந்துகளை அனுப்பியுள்ளது இந்தியா
ஆப்கானிஸ்தான் மக்கள் பொருளாதார சரிவு மற்றும் வறுமையில் தவித்து வரும் நிலையில் அவர்களுக்கு உதவ உலக சுகாதார அமைப்பு அனைத்து நாடுகளுக்கும் கோரிக்கை விடுத்தது .எனவே இந்தியா ஏற்கனவே மூன்று கட்டங்களாக கரோனா தடுப்பூசிகளை அனுப்பியிருந்தது.
இதன் தொடர்ச்சியாக அந்நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு 3டன் மருந்துகளை இந்திய அரசு வழங்கியுள்ளது.இந்த மருந்துகள் தலைநகர் காபூலில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் ஒப்படைக்கப்படும். இம்மருந்துகளைப் போல கோதுமை உள்ளிட்ட தானியங்களையும் வழங்கவுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.