ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் உள்ள 4 இடங்களில் குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டது. இதில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் ஷியா பிரிவினரை குறிவைத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து இந்த தாக்குதல் மசூதியில் மாலை நேரத் தொழுகை நடந்துகொண்டிருந்த போது குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. அதனைப் போலவே மாஷார் ஷரிப் நகரில் மூன்று மினி பேருந்துகளில் குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தது. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மேலும் தாஹாஷ் இயக்கத்தின் தாக்குதலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.