Categories
தேசிய செய்திகள்

ஆபாச வீடியோக்கள் பார்த்தவர்கள் மீது ஆக்சன்…. நாடு முழுதும் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை…!!!!

இந்தியாவில் சிறுமிகளிடம் அத்துமீறும் வீடியோக்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள் இணையதளத்தில் அதிக அளவில் பகிரப்படுவதாக சிபிஐக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 59 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் உள்ள சென்னை, திண்டுக்கல் மற்றும் கடலூர் மாவட்டத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது 50-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து ஸ்மார்ட்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த எலக்ட்ரானிக் பொருட்களிடமிருந்து அதிக அளவில் ஆபாச வீடியோக்கள் மற்றும் சிறுமிகளிடம்  அத்துமீறுதல் தொடர்பான வீடியோக்கள் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |