ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக ஆசிரியரை மிரட்டிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் இருக்கும் தனியார் மகளிர் விடுதியில் மதுரையை சேர்ந்த 25 வயது இளம்பெண் தங்கி பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த இளம்பெண் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் சமூக வலைத்தளத்தில் எனக்கு ராஜ் என்பவர் அறிமுகமானார். நாங்கள் இருவரும் 3 மாதமாக பழகினோம். இந்நிலையில் எனது ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிடுவேன் என்று ராஜ் மிரட்டினார்.
இதனால் அச்சத்தில் அவர் கேட்ட 20 ஆயிரம் ரூபாயை நான் அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பிவிட்டேன். ஆனால் மீண்டும் ராஜ் பணம் கேட்டு என்னை மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் இளம்பெண் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பவர் அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி அவரின் அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோக்களை வாங்கி மிரட்டியது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் மனோஜ் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.