ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி சிறுவர்களுக்கு ஆபாச படங்கள் காட்டி பாலியல் தொல்லை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.ராமநாதபுரம் பட்டணம்காத்தான் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (41). இவர் 2 சிறுவர்களிடம் செல்போனில் ஆபாச படம் காட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
சமீப காலமாக பள்ளிகளில் பாலியல் விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்துள்ளன. நிகழ்ச்சி முடிந்ததும் அண்ணன் தம்பியான சிறுவர்கள் ஆசிரியரிடம், ஒரு அண்ணா போனில் ஆபாச படங்கள் காட்டி எங்களிடம் அதே போல் செய்தார் என கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து உடனடியாக போலீஸ் புகார் அளிக்கப்பட்டு லோடுமேன் சாமிநாதன் என்பவரை போக்சோவில் சார் கைது செய்துள்ளனர்.