தமிழக முதல்வர் பழனிசாமியின் விளம்பரம் ஒன்று ஆபாச ஒளிபரப்பாக உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரு கட்சி தலைவர்களும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமியின் விளம்பரம் ஒன்று ஆபாச இணையதளத்தில் ஒளிபரப்பானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் வரி பணத்தை இப்படி எல்லாம் செலவழிப்பதா எனக்கூறி, அந்த விளம்பரத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். தமிழக அரசின் சாதனைகள் குறித்து எடுக்கப்பட்ட விளம்பரம் அது என்பது குறிப்பிடத்தக்கது.