Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆபாசமாக பாடம் நடத்தினாரா….?? மாணவிகள் அளித்த புகார்…. பரபரப்பு சம்பவம்….!!!

ஆபாசமாக பாடம் நடத்திய ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவிகள் சைல்ட் லைன் உதவி எண் 1098 தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். அந்த புகாரியில் கணக்குப்பதிவியல் ஆசிரியராக வேலை பார்க்கும் கிறிஸ்துதாஸ் என்பவர் பாடத்திற்கு சம்பந்தமில்லாமல் பாலியல் தொடர்பான பாடம் நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.

இதனை அறிந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளியில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து 2 மாணவிகளும் குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் அளித்து பத்து நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கப்படாததால் மாணவிகளின் பெற்றோர் நேற்று முன்தினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதனை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் கிறிஸ்துதாசை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |