ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்காமல் கட்டுப்பாடுகள் மட்டும் விதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் ஆன்லைன் விளையாட்டால் பெரும்பாலான குடும்பங்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி தங்கள் பணத்தை பறிகொடுத்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பணத்தை பறிகொடுத்த விரக்தியில் சிலர் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு செல்கிறார்கள். அதனால் ஆன்லைன் விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் ஆன்லைனில் விளையாட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்டுப்பாடுகளை மட்டும் விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி 18 வயதுக்கும் குறைவானவர்கள் ஆன்லைன் விளையாட்டு மூலம் பணம் சம்பாதிக்க முடியும். ஆன்லைன் விளையாட்டு வருமானத்திற்கான வழி, வேலை வாய்ப்புக்கான மாற்று என விளம்பரம் செய்யக்கூடாது. விளம்பரம் செய்யும் மொழியில் எச்சரிக்கையும் வெளியிட வேண்டும். இந்தக் கட்டுப்பாடுகள் வருகின்ற 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.