Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் வகுப்பில்…. மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தரும் ஆசிரியர்…. எழுந்துள்ள புகார்…!!!

தமிழகத்தில் தற்போது பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. பள்ளிகளில் கூட பெண் குழந்தைகளுக்கு ஒரு சில ஆசிரியர்களால் பாதுகாப்பற்ற சூழல் உருவாகி வருகின்றது. இவ்வாறு பாலியல் குற்றம் செய்தவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் இன்னமும் கொடூரமான முறையில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

அந்தவகையில் சென்னையில் அமைந்துள்ள PSBB பள்ளியில் ராஜகோபாலன் என்று ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. நேரடி வகுப்பில் அவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், ஆன்லைன் வகுப்பில் உடலில் துணி இல்லாமல் அவர் பங்கேற்பதாகவும் கூறப்படுகின்றது. எனவே உடனடியாக அவரை பள்ளியில் இருந்து நீக்கி சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |