Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி…. 4 வாரத்திற்குள் பதில் வேண்டும்…. ஆன்லைன் நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..!!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீட்டு செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஆன்லைன் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது

ஆன்லைன் சூதாட்டம், ரம்மி போன்ற விளையாட்டுகளால் தமிழகத்தில் தொடர்ச்சியாக தற்கொலைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அப்பாவிகள் பணத்தை இழந்து மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால் ஆன்லைன் விளையாட்டுகளை சூதாட்ட விளையாட்டுகளை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வந்தது.. இதையடுத்து தமிழக அரசு தனியாக ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை கொண்டு வந்தது.

தமிழக அரசின் இந்த இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென கோரி ஜங்லி கேம்ஸ், பிளே கேம்ஸ் மற்றும் ரீட் டிஜிட்டல் உள்ளிட்ட நிறுவனங்களின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட் தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் இந்த சட்டம், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது, சரியான காரணங்களை விளக்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி ரத்து செய்தது..

இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி அனிருத்தா போஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வேறு ஏதேனும் மனுக்கள் இதுபோல உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. கர்நாடகாவில் இருந்தும் இது சம்பந்தமான  ஒரு வழக்கு என்பது தாக்கல் செய்யப்பட்டிருப்பத்தாக மனு தாரர்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து நீதிமன்றம் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் அடுத்த 4 வார காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும், அதாவது உங்களது ஆன்லைன் விளையாட்டுகளை ஏன் நாங்கள் தடை செய்யக்கூடாது என்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அது சம்பந்தமாக அவர்கள் பதில் அளிக்க இருக்கிறார்கள்.. அதற்கு பிறகு இரண்டு வாரத்தில் தமிழக அரசு அந்த  நோட்டீசுக்கு பதில் அளித்த பிறகு வழக்கு 10 வாரம் கழித்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |