தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அரசு இதற்காக பல்வேறு கட்ட நடவடிக்கையை எடுத்து வந்தாலும் ஆன்லைன் ரம்மியில் ஈடுபட்டு பலரும் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் சேலம் தலைவாசல் அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த சூரிய பிரகாஷ் என்ற தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆன்லைன் ரம்மியில் 75 ஆயிரம் பணத்தை இழந்ததால் மாணவர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார். இதனைத் தொடர்ந்து பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.ஆன்லைன் ரம்மி தொடர்ந்து பல உயிர்களை பறித்து வரும் நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு நிரந்தர தடை வேண்டி மக்கள் காத்திருக்கின்றனர்