தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சரான ரகுபதி, ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் வைத்து சந்தித்து பேசினார். இந்நிலையில் ஆன்லைன் ரம்மி தடைசட்டம் மசோதா தொடர்பாக அமைச்சர் பேசினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி பேசியதாவது “ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக ஆளுநர் ரவியிடம் நேரிலும் விளக்கம் தந்தோம்.
இந்நிலையில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் பரிசீலனையில் உள்ளதாகவும், விரைந்து முடிவெடுப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார். ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்தால் உடனே ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் நடைமுறைபடுத்தப்படும்” என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.