Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆன்லைன் மோசடி…. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விழிப்புணர்வு…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி….!!

இணையதளத்தில் மோசடி செய்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் மாணவர்களுக்கான இணையதள மோசடி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினரால் நடத்தப்பட்டது. இதற்கு கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் பிலிப் மாணவர்களிடம் பேசினார். அதாவது, வேலைவாய்ப்பு மற்றும் பரிசுப் பொருட்கள் குறித்த குறுஞ்செய்தி கைபேசிக்கு வரும்.

இதற்கு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்துமாறும் கூறுவர். அதன்பிறகு உங்களுடைய வங்கி கணக்கில் இருந்து மொத்த பணத்தையும் பறித்துக் கொள்வார்கள். எனவே இது மாதிரியான குறுஞ் செய்திகளை நம்பி மாணவர்கள் ஏமாறக்கூடாது. இதுபோன்ற குறுஞ்செய்தி ஏதேனும் வந்தால் உடனே சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். இல்லையெனில் 1930 என்ற தொலைபேசி எண்ணின் மூலமாகவும், www. cybercrime.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் புகார் அளிக்கலாம் என்று கூறினார்.

Categories

Tech |