இந்தியாவில் வசிக்கும் மக்களின் முக்கிய ஆவணமாக ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் அரசின் துறை சார்ந்த அனைத்து பணிகளையும் மேற்கொள்ள இந்த ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ள 12 இலக்க எண் மிக முக்கியமானதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேலும் இத்தகைய ஆதார் எண்ணை பயன்படுத்தி நாட்டில் மோசடிகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க கூடிய வகையில் மத்திய அரசு வாக்காளர் எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
இதனையடுத்து இந்தியா வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை அவரவர் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற தேர்தல் சட்டத்திருத்த மசோதா 2021 இயற்றப்பட்டது. தற்போது இந்தியா முழுவதும் தேர்தல் ஆணையத்தின் மூலம் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த செயல்முறை வீட்டில் இருந்து செயல்படுத்துவது குறித்து வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
- முதலில் உங்கள் மொபைல் போனில் `voter helpline app’- ஐ டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும். பிறகு ஆப்பை திறந்து அதில் தோன்றும் I Agree பகுதியை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும்.
- அதன் பிறகு திறக்கும் பக்கத்தில் Voter Registration என்ற பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில், Electoral Authentication Form என்ற பகுதியை தேர்வு செய்து கிளிக் செய்ய வேண்டும்.
- இதனை தொடர்ந்து Let’s Start என்ற தேர்வை கிளிக் செய்து கொள்ள வேண்டும். இதன் பிறகு உங்கள் மொபைல் எண் கேட்கப்படும். இங்கு ஆதார் எண்னுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை குறிப்பிட வேண்டும்.
- கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு `one time password – OTP’ ஒன்று அனுப்பப்படும். அதனை உள்ளிட வேண்டும். அதன் பிறகு `Yes, I have voter ID’ என்ற பகுதியை தேர்வு செய்து, பின் NEXT என்ற பகுதியை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும்.
- இங்கு உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளிட வேண்டும். இதனை தொடர்ந்து நீங்கள் வசிக்கும் மாநிலம், `fetch details’ என்ற பகுதியை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு ‘proceed’ கொடுக்க வேண்டும். மேலும் தொடர்ந்து உங்களுடைய ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்ணை உள்ளிட்டு, `Done’ என்று கொடுக்கவும்.
- அதனுடன் process முடிந்து உங்களுடைய FORM- 6B காண்பிக்கப்படும். இதில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அதனை சரிசெய்து மற்றொரு முறை confirm என்று கொடுத்தால் உங்களுடைய வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் process முடிவடைந்துவிடும்.