Categories
Tech டெக்னாலஜி

ஆன்லைன் மூலம் பணம் அனுப்பும்போது தெரியாம பணத்தை இழந்துட்டீங்களா?…. கவலையை விடுங்க…. இதோ இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை தான் பயன்படுத்துகின்றனர்.முன்பெல்லாம் பணத்தை எடுப்பதற்கு டெபாசிட் செய்வதற்கும் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் பண பரிமாற்றம் என்பது மிகவும் சுலபமாகிவிட்டது. பணம் அனுப்புவதற்கு பல மொபைல் செயலிகள் வந்துவிட்டன.இதனால் மக்களின் நேரமும் அலைச்சலும் மிச்சம் ஆகிறது. அதே சமயம் நீங்கள் ஒரு எண்ணை தவறாக உள்ளிட்டாலும் பணம் பறிபோய்விடும் ஆபத்தும் உள்ளது.

சில நேரங்களில் இணையதள கோளாறு காரணமாக நீங்கள் அனுப்பும் பணம் மற்றொரு கணக்கில் போய் சேரும் சிக்கல்களும் ஏற்படுகின்றது.இது போன்ற சூழலில் வாடிக்கையாளர்களின் பணத்தை 48 மணி நேரத்திற்குள் திருப்பி செலுத்துவது வங்கியின் பொறுப்பு என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதனால் பணத்தை இழந்தவர்கள் https://rbi.org.in/scripts/complaints.aspxஎன்ற இணையதள பக்கத்தில் சென்று புகார் தெரிவித்து உங்கள் பணத்தை திரும்ப பெற முடியும். அவ்வாறு புகார் தெரிவிக்கும் போது பெயர், பரிவர்த்தனை குறிப்பு எண், தேதி, தொகை மற்றும் வங்கியின் ஐஎப்எஸ்சி குறியீடு பணம் அனுப்பப்பட்ட கணக்கு எண் ஆகியவற்றை கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

Categories

Tech |