Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் மூலம் அப்பாயிண்ட்மெண்ட்…. ஆதார் வைத்திருப்பவர்களுக்கு செம குட் நியூஸ்…..!!!!!

நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு இந்திய குடிமகன் என்பதற்கான அடையாள அட்டையாக ஆதார் அட்டை உள்ளது. பல அரசு மற்றும் அரசு சாரா சலுகைகளைப் பெற கட்டாயமான ஆவணமாகவும் ஆதார் அட்டை உள்ளது. மேலும் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல் அரசாங்க படிவங்களை நிரப்புவது வரை அனைத்திற்கும் ஆதார் அட்டை தேவைப்படுகிறது. ஏனெனில் அதில் தனி நபரின் அனைத்து விபரங்களும் இருக்கும். இந்த விவகாரங்களில் மாற்றம் எதாவது இருந்தால் அதை ஆன்லைன் வாயிலாக எளிதில் மாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விபரங்களை மாற்ற அல்லது புதிய ஆதார் அட்டை வாங்க நீங்கள் ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. ஏன்னென்றால் வீட்டில் இருந்தபடியே அபாயிண்ட்மெண்ட் வாங்கலாம். ஆதார் அட்டையை அப்டேட் செய்ய எப்படி அப்பாயிண்ட் மெண்ட்டை பெறுவது என்பது குறித்த முழு விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம். அப்பாயிண்ட்மெண்ட் வாயிலாக பெறப்படும் சேவைகள்,

# புதிய ஆதார் பதிவு

# பெயர் புதுப்பிப்பு

# முகவரி புதுப்பிப்பு

# மொபைல் எண் புதுப்பிப்பு

# மின்னஞ்சல் ஐடி புதுப்பிப்பு

# பிறந்த தேதி புதுப்பிப்பு

# பாலின புதுப்பிப்பு

# பயோமெட்ரிக் புதுப்பிப்புகள்

அப்பாயிண்ட்மெண்ட் பெற எளிய வழிமுறைகள்

# https://uidai.gov.in/ க்குச் செல்லவும்

# MyAadhaar என்பதைக் கிளிக் செய்து, Book a appointment என்பதை தேர்ந்தெடுக்கவும்

# ஆதார்சேவை மையங்களில் அப்பாயிண்ட்மெண்ட் புக் செய்வதை தேர்வு செய்யவும்

# டிராப்டவுனில் உங்கள்நகரம் மற்றும் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

# Proceed to book appointment என்பதனைக் கிளிக் செய்யவும்

# மொபைல் எண்ணை உள்ளிட்டு பின் “புதிய ஆதார்” (அல்லது) “ஆதார் புதுப்பிப்பு” டேபைக் கிளிக் செய்யவும்

# கேப்ட்சாவை உள்ளிட்டு பின் OTP ஐ உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்

# OTP-ஐ உள்ளிட்டு சரிபார் என்பதனைக் கிளிக் செய்யவும்

# ஆதாரத்துடன் தனிப்பட்ட விபரங்கள் மற்றும் முகவரி விபரங்களை உள்ளிடவும்

# டைம்ஸ்லாட்டைத் தேர்ந்தெடுத்து “நெக்ஸ்ட்” என்பதைக் கிளிக் செய்யவும்

# இவ்வாறு செய்தால் உங்கள் அப்பாயிண்ட்மெண்ட் முழுமையாக நடைபெறும்

Categories

Tech |