ஆன்லைனில் மகன் பாடம் படிக்காத காரணத்தினால் மகனை கொன்றுவிட்டு தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே பாத்தார்டி பாட்டா என்ற பகுதியை சேர்ந்த சாகர் பாட்டக், சிக்கா என்ற தம்பதிகளுக்கு மூன்றரை வயதில் மகன் ஒருவர் இருந்துள்ளார். அவரது பெயர் ரிதான். அவரை பள்ளியில் சேர்க்க முடிவு செய்த பெற்றோர்கள் அருகிலுள்ள மழலையர் பள்ளியில் சேர்த்தனர். கொரோனா காலம் என்பதால் பள்ளி திறக்கப்படாமல் ஆன்லைனிலேயே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. ரிதான் ஆன்லைன் வாயிலாக கல்வி பயின்று வந்தான்.
ஒரு நாள் ஆன்லைன் பாடத்தை கவனிக்காமல் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தாய் சிக்கா, ரிதானை மிக பயங்கரமாக அடித்துள்ளார். இதனால் ரிதான் உயிரிழந்தான். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இந்திராநகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தற்கொலை செய்வதற்கு முன்பாக எனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்று எழுதி வைத்திருந்த குறிப்பு காவல்துறையினருக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.