Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆன்லைன் சூதாட்டம்” ரூ.2,00,000 வரை போச்சு…. ஓட்டல் ஊழியரின் விபரீத முடிவு….!!

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூபாய் 2 லட்சம் பணம் இழந்ததால் ஓட்டல் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலுள்ள மேற்கு மாம்பலம் நாகாத்தம்மன் பகுதியில் வசித்து வருபவர் 24 வயதான காந்திராஜா. இவர் வேளச்சேரி அருகிலுள்ள ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளகவே ஆன்லைன் விளையாட்டில் சூதாடிய காந்திராஜா ரூபாய் 2 லட்சம் வரை பணத்தை இழந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காந்திராஜா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அப்போது அவர் வீட்டுக்கு தண்ணீர் கேன் கொண்டு வந்த நபர் கதவை வெகுநேரம் தட்டியும் திறக்காததால் அங்கிருந்த ஜன்னல் வழியாக எட்டி உள்ளே பார்த்துள்ளார்.அப்போது தூக்கில் பிணமாக காந்திராஜா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அப்பகுதியிலுள்ள குமரன் நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று காந்தி ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |