Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஆன்லைன் சீட்டு விளையாட்டுக்கு தடை ? ஐகோர்ட் கிளை அதிரடி …!!

பணத்தை மையமாக கொண்டு நடைபெறும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய புதிய சட்டம் தேவை என உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் சேர்ந்த சிலுவை  மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கொரோனா வைரஸ் தடுப்பிற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த என் மீதும் தன் நண்பர் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்து இருக்கின்றது. பொது இடத்தில், நடைபாதையில் சீட்டு விளையாடினால் தான் வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஆகவே தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, தமிழக அரசு லாட்டரி சீட்டு விற்பனை தடை செய்ததன் காரணமாக பல்வேறு தற்கொலைகள் தடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு குடும்பங்கள் வறுமை நிலைக்கு தள்ளப்படும் நிலையும் தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது ஆன்லைன் விளையாட்டுகள் பணத்தை மையமாக வைத்து நடைபெறுகின்றன. குறிப்பாக இது வேலையில்லாத இளைஞர்களின் நேரத்தையும், அவர்களுடைய சிந்திக்கும் திறனையும் கெடுக்கின்றது.

இது சமூகத்தில் தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தியது. ஆகவே மத்திய, மத்திய அரசு இது போன்ற ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்வதற்கு உரிய சட்டங்களை இயற்ற வேண்டும். இதன் மூலமாக இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்வது தவிர்க்க எதுவாக இருக்கும் என்ற ஒரு கருத்தை பதிவு செய்து வழக்கை முடித்து வைத்துள்ளார்கள்.

Categories

Tech |