இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைன் மூலமாகவே வாங்கி வருகிறார்கள். இதற்காக ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், பிளிப்கார்ட் செயலிகளை பயன்படுத்துகின்றனர். இதனால் இந்தியாவின் சந்தை வெளிநாட்டு நிறுவனங்களிடம் சென்று விடும் என்ற அச்சத்தில் பொருளாதாரம் வல்லுநர்கள் இருக்கின்றனர். இதனால் இதனை தடுக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக புதிய தளம் ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது Open Network For Digital Commerce என்ற ONDC என்ற தளத்தை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.
இது முதன் முதலாக இன்று முதல் பெங்களூரில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தளத்தில் சுமார் 20 நிறுவனங்கள் 255 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி எஸ்பிஐ வங்கி, யுகே வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட வங்கிகளும் முதலீடு செய்துள்ளது. இதனை பயன்படுத்தி நாட்டில் இருக்கும் சிறு ரீடைல் விற்பனையாளர்களை ஒருங்கிணைக்க முடியும். இதன் பிறகு இதனுடைய வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும்.
எனவே பொதுமக்கள் அதிகமாக உபயோகித்து வரும் அமேசான், பிளிப்கார்ட் செயலிகளை விட இந்த செயலியை அதிகம் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்திய நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்கள் அதிகமான லாபத்தை பெற முடியும். இதில் உங்களுக்கு பிடித்த ஒன்றை நீங்களே ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். உதாரணமாக நீங்கள் வாட்சை தேடினால் இந்த தளத்தில் இருக்கும் விற்பனையாளர்கள் முதலில் காண்பிக்கப்படுவார்கள்.