இணையதளம் மூலமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இணையதளம் மூலமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் மதுரப்பாக்கம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த காரை நிறுத்துமாறு காவல்துறையினர் சைகை காண்பித்துள்ளனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் அந்த காரை விரட்டி சென்று பிடித்தனர்.அதன்பின் காரில் இருந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் விழுப்புரத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பது தெரியவந்தது. இவர் இணையதளம் மூலமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததுள்ளார். இதனையடுத்து ஸ்ரீதரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து 3 1/2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 3 செல்போன்கள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.