ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவின்பேரில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகின்றது. தற்போது ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளதால் அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். புதிய அமைச்சரவை வரும் 11ம் தேதி பதவி ஏற்க உள்ளது.
இதில் புதுமுகம் பலருக்கு வாய்ப்பளிக்க அவர் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக நேற்று மாலை ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தனை ஆலோசனை சந்தித்து பேசினார். புதிய அமைச்சரவையில் 5 துணை முதல்வர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கு வசதியாக தற்போது அமைச்சராக உள்ள 24 பேரும் இன்று ராஜினாமா செய்தனர். இதற்கிடையே 2024 தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் இந்த அமைச்சரவை மாற்றம் இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.