ஆந்திரமாநிலம் ஸ்ரீகாகுளம் அருகேயுள்ள சுன்னப்பள்ளி பகுதியில் மீனவர்கள் நேற்று மாலை ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். இந்நிலையில் தங்க நிறத்திலான தேர்க் கடலில் மிதந்து கொண்டிருந்தது. அதனை தூரத்தில் பார்ப்பதற்காக கோயில் மிதந்து வருவது போல் இருந்ததை கண்டு மீனவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இதையடுத்து அருகே சென்று பார்த்தபோது தங்க முலாம் பூசப்பட்ட தேர் என்று தெரியவந்தது. அந்த தேரில் ஆட்கள் யாருமில்லை. அதன்பின் மீனவர்கள் அத்தேரை தங்களது படகில் கட்டிக்கொ
ண்டு சுன்னப்பள்ளி கடற்கரைக்கு கொண்டு வந்தனர். இது தொடர்பாக அறிந்த கடலோர காவல்படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படகில் இருந்து தேரை மீட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த தேரின் மீது வெளிநாட்டு மொழியில் எழுதப்பட்டிருந்தது. அந்த எழுத்துக்கள் தாய்லாந்து, ஜப்பான் (அல்லது) மலேசிய நாட்டு எழுத்துக்களாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அத்துடன் 16/01/22 என எழுதப்பட்டிருந்தது.
அதிகாரிகள் தேரில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் எந்நாட்டை சேர்ந்தது, எந்த நாட்டிலிருந்து தேர் கடலில் மிதந்து வந்தது என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்போது ஆந்திராவில் அசானி புயல் கரையை கடப்பதால் கடல் சீற்றம் காரணமாக தேர் ஆந்திரா கடலில் மிதந்து வந்து இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். ஆகவே கடலில் தேர் மிதந்து வந்த சம்பவம் பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.