Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் சாமினியர்கள் அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு

ஆந்திராவில் தனியார் மருத்துவமனைகளை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துமாறு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழிலாளர்களோ, முதியவர்களோ, சாமியார்களோ ஒருவர் கூட உணவு கிடைக்காமல் பாதிக்கப்படக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். அனைவர்க்கும் உணவுகளை வழங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1251 ஆக உள்ளது. மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 225 பேரும், கேரளாவில் 234 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 138 ஆக உள்ளது. இருப்பினும், பலரின் ரத்த மாதிரிகள் வெளிவராததால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களை தனியார் மருத்துவமனையில் வைத்து கண்காணிக்க அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். ஆந்திர பிரதேச மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரசால் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், மாநிலத்தின் தலைநகர்களில் ஒன்றான விசாகப்பட்டினத்தில் அதிகபட்சமாக 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிப்பு அதிகரிப்பதை தடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி, தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் படுக்கைகள், வார்டுகள், ஐசியூ, வெண்டிலேட்டர்கள், சோதனை ஆய்வகங்கள், மருந்தககங்கள், சவக்கிடங்குகள், உபகரணங்கள், மனிதவளம் என அனைத்து உட்கட்டமைப்புகளையும் தயார் நிலையில் வைத்திருந்து அரசின் தேவைக்கு ஏற்ப கிடைக்கப்பெறச் செய்யவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தொற்றுநோய் தடுப்புச் சட்டம் 1,897 மற்றும் ஆந்திரா தொற்றுநோய் கோவிட் 19 2020 விதியின்படி இந்த அதிகாரங்களை பயன்படுத்த மாவட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் அளித்துள்ளார். இந்த உத்தரவை எதிர்க்கும் மருத்துவமனைகள் இந்திய தண்டனைச் சட்டம் 188ன் படி, தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |