ரஷ்யாவின் போருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் Z என்ற சின்னத்தை பயன்படுத்துபவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், “Z” என்ற எழுத்தை ஜெர்மனியில் பயன்படுத்தும் நபர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி பெர்லின் மாநிலத்தின் உள்துறை மந்திரி, ரஷ்யாவின் போருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் Z என்ற சின்னத்தை பயன்படுத்துபவர்கள் மீது நகர அதிகாரிகள் வழக்கு பதிவு செய்வார்கள் என்று கூறியுள்ளார்.
இதைப்போல் இதற்கு முன்னதாக பவேரியா மற்றும் லோயர் சாக்சோனி உள்ளிட்ட மாநிலங்களும், அத்தகைய செயல்களில் ஈடுபடும் நபர்களை தண்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் இது குறித்து ஜெர்மனியின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “Z எழுத்து நிச்சயமாக தடைசெய்யப்படவில்லை, ஆனால் தனிப்பட்ட சந்தர்ப்பங்களில் அதன் பயன்பாட்டால், ரஷ்ய ஆக்கிரமிப்புப் போருக்கு ஒப்புதல் அளிக்கும்” விதமாக இருந்தால் அது குற்றமாகும் என்று கூறியுள்ளார்.
மேலும் உக்ரைன் மீதான ரஷ்ய நடத்தி வருகிற ஆக்கிரமிப்புப் போர் ஒரு கிரிமினல் நடவடிக்கையாகும். மேலும் இந்த ஆக்கிரமிப்புப் போரை பகிரங்கமாக அங்கீகரிக்கும் எவர் மீதும் வழக்குத் தொடர முடியும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கூட்டாட்சி பாதுகாப்பு அதிகாரிகள் இச்சம்பவத்தில் ஒரு கண் வைத்திருக்கிறார்கள், மேலும் இது ஒரு குற்றச் செயலாக இருக்குமா என்பதை பல கூட்டாட்சி மாநிலங்களும், தனிப்பட்ட வழக்குகளில் ஆய்வு செய்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை நாங்கள் வரவேற்பதாகவும், அவர் கூறியுள்ளார்.