Categories
உலக செய்திகள்

ஆத்தாடி! கொரோனா தடுப்பூசியா ? ஆள விடுங்கடா சாமி… கொளுத்தி போட்ட ஈரான் …!!

அமெரிக்கா,இங்கிலாந்து நாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை ஈரானில்  இறக்குமதி செய்ய அந்நாடு தடைவிதித்துள்ளது.

அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனமும், இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜனகா நிறுவனமும் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை ஈரானில் இறக்குமதி செய்ய ஈரான் நாட்டு தலைமை மதகுரு அயத்துல்லா கமேனி தடை விதித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருப்பதால் அங்கு தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் நம்பகத்தன்மை அற்றது எனக் கூறினார்.

அதன்பின்,அமெரிக்காவின் பைசர் கோவிட் -19 தடுப்பூசிகளை ஈரானில் இறக்குமதி செய்வதை ஈரானிய ரெட் கிரசென்ட் சொசைட்டி ரத்து செய்யப்போவதாக அறிவித்தது.அமெரிக்காவில் இருந்து ஒன்றரை லட்சம் தடுப்பூசி டோஸ் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்திருந்தது. வரும் நாட்களில் எங்களுக்கு கோரோனா தடுப்பூசி தேவைப்பட்டால் கிழக்கு நாடுகளிலிருந்து பெற்றுக்கொள்வோம் என்று ஈரான் நாட்டு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Categories

Tech |