உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு விசித்திரமான சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது. சில சம்பவங்கள் நகைச்சுவையாக இருந்தாலும், சில சம்பவங்கள் அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வாக உள்ளது. அப்படி தற்போது சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜேசிபி இயந்திரம் பாம்பு ஒன்றை வைத்து தூக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இந்த வீடியோவை வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Massive! It took a crane to shift this #python weighing 100 kg and measuring 6.1 m length, in Dhanbad, Jharkhand. #nature #wildlife #snakes #forests #India @wwfindia @natgeoindia pic.twitter.com/nZMNUtLkbv
— Parimal Nathwani (@mpparimal) October 18, 2021
அந்த வீடியோவில் ஜேசிபி இயந்திரமானது மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்றை தூக்கிச் செல்கிறது. இந்த வீடியோவை 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பார்த்துள்ளனர்.ஜார்கண்டின் சிந்த்ரியின் எஸ்சிஐ ஹரால் வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட எல்லைச் சுவரின் உள்ளே இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக பலரும் கூறுகின்றன. ஆனால் இந்த தகவல் தற்போது வரை உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் இந்த வீடியோவை பார்க்கும் போது மிகவும் பயமாக தான் உள்ளது.