தமிழகத்தில் சென்ற 2 வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வழக்கம்போல் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கடந்த வருடங்களை போன்று இல்லாமல் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் அதிகமான மாணவர்கள் சேர்ந்திருக்கின்றனர். அத்துடன் ஏழை எளிய மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளுக்கு நிகரான கல்விகொடுக்க வேண்டுமென அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் உயர்கல்வி சிறப்பாக அமைய சில திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் பயில வேண்டும் என்பதற்காக சிறப்பு பள்ளிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த மாணவர்களுக்கு வசதியாக அந்தந்த பள்ளிகளுக்கு அருகில் விடுதி வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நடப்பு ஆண்டிற்கான 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இதில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் உயர் கல்வியில் சேர்ந்து வருகின்றனர்.
அந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து ஆலோசனை குழு மாற்றி அமைப்பு பணி நடந்து வருகிறது. இக்குழுவில் மாவட்ட கல்வி அலுவலர், சட்டமன்ற உறுப்பினர், பட்டியல் இனத்தை சேர்ந்த 2 பேரும் இருப்பார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் வாயிலாக ஏழை, எளிய மாணவர்களுக்கு சரியான அடிப்படையில் பள்ளி கல்லூரிகளில் இடம்கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.