ஆதிவாசி மக்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் அருகே போஸ்பாரா பகுதியில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆதிவாசி மக்களிடம் முதியோர் ஓய்வூதியம், சாதி சான்றிதழ் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் களுக்கான சான்றிதழ்களை அதிகாரிகள் பெற்றனர்.
இந்த கூட்டத்தில் கிராம உதவியாளர் பாக்கியலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் முகமது ஜாபர் ஷரீப், வருவாய் ஆய்வாளர் உமா உள்பட சில அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான ஆதிவாசி மக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.