நடிகர் பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆதிபுருஷ் இந்த. படமானது ராமாயணத்தை மையமாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
இந்த டீசர் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் ஆதிபிருஷ் படத்தை வெளியிடக்கூடாது என்றும் அதன் வெளியீட்டை தடை செய்ய வேண்டும் என்று அயோத்தி ராமர் கோயிலின் தலைமை குழு வலியுறுத்தியுள்ளது பெரும் பரபரப்பு கிளப்பி உள்ளது. இந்த திரைப்படத்தில் ராமர் மற்றும் அணுமனை தவறாக சித்தரித்துள்ளனர். எனவே அதனுடைய வெளியீட்டை தடை செய்ய வேண்டும் என்று ராமர் கோயிலின் தலைமை குருவான சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார்.