இந்தியாவில் ஆதார்அட்டை முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. இப்போது ஆதார் பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது அனைத்துதுறைகளிலும் ஆதார் எண் கேட்கின்றனர். அரசின் நலத் திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அவசியம் ஆகும். இந்நிலையில் வங்கிகணக்கு எண், பான் கார்டு எண் போன்றவற்றை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் அடையாள ஆவணங்களில் ஒன்றான வாக்காளர் அடையாள அட்டையுடனும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் ஆதார் எண்ணை வைத்து இணையவசதி இன்றி வங்கியின் இருப்பு நிலையை தெரிந்துகொள்ளும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு நாம் ஆதார் எண்ணுடன் வங்கிக்கணக்கு எண்ணை இணைக்க வேண்டும். முன்பே ஆதார் எண், வங்கி கணக்கு, மொபைல் எண் இணைக்கப்பட்டு இருந்தால் நேரடியாக வங்கி ணக்கின் இருப்புத்தொகையை அறியலாம். ஸ்மார்ட் போன் இல்லாதவர்களுக்கும், இணையவசதி இல்லாதவர்களுக்கும் இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.
# உங்களின் புதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து *99*99*1# என்ற எண்ணுக்கு டைல் செய்ய வேண்டும்.
# பின் வரும் பக்கத்தில் உங்களின் 12 இலக்க ஆதார் எண்ணை-ஐ டைப் செய்ய வேண்டும்.
# பதிவிட்ட பின் மீண்டுமாக ஒருமுறை டைப் செய்து அதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.
# இறுதியாக உங்களுக்கு பிளாஷ் மெசேஜ் வரும் அவற்றில் உங்கள் வங்கிக்கணக்கின் இருப்புத் தொகை காட்டும்.