நாடு முழுவதும் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். இந்த ஆதார்கார்டை பயன்படுத்திதான் அரசின் அனைத்து சேவைகளையும் பெற முடிகிறது. தற்போது ஆதார்கார்டு வாயிலாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது, சிலிண்டர் பெறுவது, வருமான வரி தாக்கல் செய்வது உள்ளிட்ட பல செயல்பாடுகளுக்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. அதன்பின் ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டு, வங்கி கணக்கு உள்ளிட்டவை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதனைதொடர்ந்து தற்போது பான் கார்டுடன், ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் வரும் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இதற்கு முன்பாக இதற்கான கால அவகாசம் கடந்த வருடம் செப்டம்பர் வரை வழங்கப்பட்டது. இந்த 2 ஆவணங்களையும் இணைப்பதற்கு கட்டாயமான ஒன்று 2 ஆவணங்களிலும் பெயர், வயது, பிறந்ததேதி உள்ளிட்ட விபரங்கள் அனைத்தும் ஒரெ மாதிரியாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பதற்கான வழிமுறைகளை குறித்து காணலாம்.
# Income Tax e-filing எனும் இணையதள முகவரிக்கு சென்று தங்களின் விபரங்களை கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.
# இதையடுத்து OTP எண்ணை கொடுத்து வெரிபிகேஷன் முடிக்க வேண்டும். இந்நிலையில் பான் கார்டு தொடர்பான விபரங்களை கொடுத்து பாஸ்வேர்டு உருவாக்க வேண்டும். பின் மீண்டும் தங்கள் கணக்கில் LOGIN செய்யவேண்டும்.
# தற்போது ஆதாரை இணைப்பதற்கான “Link Aadhaar” கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அதை தேர்வு செய்த பின் புதிய பக்கம் தோன்றும்.
#இதில் பான்எண் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை கொடுக்க வேண்டும். அதன்பின் கேப்சா கோடை கொடுக்க வேண்டும்.
# இறுதியில் லிங்க் ஆதார் என்ற பட்டனை அழுத்த வேண்டும். தற்போது தங்களின் 2 ஆவணங்களும் இணைக்கப்பட்டுவிடும்.