இன்றைய காலக்கட்டத்தில் ஆதார்அட்டை நம்முடைய மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆதார் இல்லையெனில் நம் பல்வேறு பணிகள் முடங்கி விடும். இதுதவிர்த்து ஆதார் இன்றி நாம் எவ்வித அரசாங்கத் திட்டத்தையும் பயன்படுத்திக்கொள்ள முடியாது. ஆதார் நம் அடையாளம் மற்றும் முகவரிக்கு வலுவான ஒரு சான்றாகும். இதற்கிடையில் ஆதார்கார்டை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவது மிகவும் கடினம் என்றாலும் இன்றைய காலக்கட்டத்தில் எதுவுமே அசாத்தியமில்லை.
நம் அனைவரும் ஆதார்அட்டையின் பாதுகாப்பு மற்றும் அவற்றில் உள்ளிடப்பட்ட தனிப்பட்ட தகவல்களில் தனிகவனம் செலுத்த வேண்டும். ஆதாரை வழங்கும் நிறுவனம்ஆன யுஐடிஏஐ, இதற்குரிய பல்வேறு வசதிகளை அளிக்கிறது. இதன் கீழ் நம்முடைய ஆதார்பயோமெட்ரிக்ஸை லாக் செய்யலாம். இதன் வாயிலாக நம் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். இதன் சிறப்பம்சம் என்னவெனில், தேவைப்படும்போது எப்போது வேண்டுமானாலும் இதை அன்லாக் செய்து கொள்ளலாம்.
பயோ மெட்ரிக் லாக்,அன்லாக் என்பது ஆதார்அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் தங்களது பயோ மெட்ரிக்ஸைப் லாக்செய்யவும் அன்லாக் செய்யவும் அனுமதிக்கும் அம்சமாகும். இந்த அம்சத்தின் முக்கியமான நோக்கம் உங்களது பயோமெட்ரிக்ஸ் தரவு, கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேனின் தனியுரிமையை வலுப்படுத்துவதாகும். அவ்வாறு லாக்செய்தபின், உங்களின் ஆதார் பயோமெட்ரிக்ஸை அங்கீகாரத்துக்காக யாரும் பயன்படுத்தமுடியாது. இதனை ஒருமுறை லாக் செய்து விட்டால், நீங்கள் கூட இதனை சுய அங்கீகாரத்திற்காகப் பயன்படுத்தமுடியாது. இதனை அன்லாக் செய்தபிறகே உங்களாலும் இதை பயன்படுத்த முடியும்.
ஆதார் பயோமெட்ரிக்ஸை லாக்செய்ய இந்த செயல்முறையை கடைபிடிக்கவும்
# உங்களது ஆதாரை பயோமெட்ரிக் லாக்கிங்செய்ய, முதலாவதாக அதிகாரப்பூர்வமான இணையமான https://resident.uidai.gov.in/bio-lock க்குச் செல்ல வேண்டும்.
# வலைத்தளத்துக்கு சென்றபின், நீங்கள் திரையிலுள்ள ஒரு தேர்வுப் பெட்டியைக் (செக் பாக்ஸ்) கிளிக்செய்யவும்.
# அவற்றில் உங்களது பயோமெட்ரிக்கைத் அன்லாக் செய்யும் வரையிலும் பயோமெட்ரிக்கை அங்கீகரிக்க இயலாது என எழுதப்பட்டிருக்கும்.
# செக்பாக்சில் கிளிக் செய்தபின், Lock/Unlock Biometrics என்பதனைக் கிளிக் செய்ய வேண்டும்.
# Lock/Unlock Biometrics என்பதைக் கிளிக்செய்த பின், உங்களது திரையில் புது பக்கம் திறக்கும்.
# இந்த புது பக்கத்தில் உங்களது 12இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்டு கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு Send OTP என்பதைக் கிளிக் செய்யவும்.
# தற்போது உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும்.
# இந்த OTP-யை உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக்செய்யவும்.
# அதனை தொடர்ந்து உங்களது ஆதார் பயோ மெட்ரிக்ஸ் லாக் செய்யப்படும்.