நாடு முழுவதும் உள்ள ஆதார் கார்டு பயனர்களுக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காதவர்கள் உடனே இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அப்படி இணைக்காதவர்களின் பான் கார்டு பயன்பாட்டை இழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பதற்கு egov-nsdl.com என்ற இணையதளத்தில் சென்று Select Tax applicable – (0021) என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். பிறகு (500) Other Receipts-ஐ தேர்வு செய்து, பேன், பேமண்ட் மெத்தட், முகவரி ஆகிய தகவல்களை தர வேண்டும். இந்த செயல்பாடு முடிந்தவுடன் 4-5 நாட்களில் பான் ஆதார் கார்டுகள் இணைக்கப்பட்டுவிடும்.