இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணம்.இது வெறும் அடையாள ஆவணம் மட்டுமல்லாமல் பணம் சார்ந்த நிறைய விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் பயன்படுகிறது. இப்படிப்பட்ட ஆதார் கார்டை வைத்து கடன் வாங்கலாம் என்பது நிறைய பேருக்கு தெரியாது. இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகள் தற்போது தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஆதார் கார்டு மூலமாக கடன் வழங்கி வருகின்றன.
அதன்படி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, எச்டிஎஃப்சி வங்கி, கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட வங்கிகளில் ஆதார் கார்டை வைத்து நீங்கள் கடன் வாங்க முடியும். ஆதார் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் இந்த கடன் கிடைக்காது.அவர்களுடைய கிரெடிட் ஸ்கோர் பொருத்தே கடன் வழங்கப்பட்டு வருகிறது.வங்கிக்குச் சென்று கடனுக்காக விண்ணப்பிக்கும் போது அல்லது ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் போது அந்த நபரின் பான் கார்டு விவரங்களை வைத்து ஸ்கோர் எவ்வளவு என்று வங்கிகள் சரி பார்க்கும்.
ஒருவேளை அது குறைவாக இருந்தால் அல்லது இதற்கு முன்பு கடனை திருப்பி செலுத்தாமல் பிரச்சனை ஏற்பட்டு இருந்தால் உங்களுக்கு கடன் கிடைப்பது சிரமம்தான். குறிப்பாக 750 க்கு மேல் கிரெடிட் ஸ்கோர் இருப்பவர்கள் ஆதார் கார்டை வைத்து மிக எளிதில் கடன் வாங்க முடியும்.எந்த வங்கியில் கடன் வாங்க நீங்கள் நினைக்கிறீர்கள் அந்த வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலமாக சென்று விண்ணப்பிக்கலாம். உங்களுடைய ஆதார் விவரங்கள் அனைத்தையும் அதில் வழங்க வேண்டும். மேலும் பான் கார்டும் அவசியம் தேவைப்படும்.