Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டு மூலம் வங்கி இருப்புத்தொகை தெரியணுமா?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார்கார்டு இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. ஏனெனில் ஆதார் அட்டைகள் வாயிலாகவே பல்வேறு சேவைகளை மத்திய-மாநில அரசுகளானது குடிமக்களுக்கு வழங்கிவருகிறது. ரேஷன் கடைகளில் அரிசி வாங்குவதிலிருந்து வங்கிக் கணக்குகள் வரைக்கும் அனைத்து தேவைகளுக்கும் ஆதார் கார்டு இன்றியமையாத ஒன்று. இப்போது ஆதார் அட்டைகள் வாயிலாக மற்ற சேவைகளையும் மத்திய-மாநில அரசுகள் குடிமக்களுக்கு வழங்கி உள்ளது.

அதன்படி ஆதார் அட்டைகள் மூலம் இன்டர்நெட் சேவை இல்லாமலேயே தொலைபேசிகளில் வங்கிகளில் உள்ள இருப்புத்தொகையை சரிபார்த்துக் கொள்ளலாம். இந்த புது திட்டம் ஸ்மார்ட் போன் அல்லாத மற்றும் இணைப்புசேவை வழங்கப்படாத மொபைல் வைத்திருக்கும் மூத்தகுடிமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்போது ஆதார் எண் வாயிலாக எவ்வாறு வங்கிகணக்கை சரிபார்ப்பது என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.

முதலாவதாக வங்கியின் இருப்புத்தொகையை சரிபார்க்க வேண்டும் எனில் ஆதார்அட்டையை கட்டாயமாக வங்கிக்கணக்குடன் மற்றும் மொபைல் எண்ணுடன் இணைத்திருக்க வேண்டும். அதன்பின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிலிருந்து *99*99*1# என டைப் செய்ய வேண்டும். அடுத்ததாக ஆதார் எண்ணான 12 இலக்க எண்ணை டைப்செய்து ஒரு முறை உறுதிசெய்துகொள்ள வேண்டும். அதனை தொடர்ந்து உங்கள் மொபைலுக்கு வங்கியின் இருப்புத்தொகை காண்பிக்கப்படும்.

Categories

Tech |