ஆதார் அடையாள அட்டை மூலமாக வங்கியில் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளில் தனிநபர் ஆதார் அடையாள அட்டை மூலமாக கடன் பெறும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது வங்கியில் கடன் பெற பெறுவதற்கு வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம். நீங்கள் விண்ணப்பிக்கும் கடனுக்கு KYC சரிபார்ப்புக்கு பிறகு வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கடன் வழங்குகிறது. ஆனால் இதற்கு நல்ல கிரெடிட் ஸ்கோர் இருக்க வேண்டும். இந்நிலையில் ஆதார் அடையாள அட்டை மூலமாக SBI , HDFC , Kotak Mahindra Bank போன்ற பல பெரிய வங்கிகளும் கடன் வழங்குகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் கடன் பெற இருக்கும் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குள் செல்ல வேண்டும்.
அதன்பிறகு உங்களுடைய மொபைல் நம்பர் மற்றும் OTP நம்பர் மூலமாக உள்ளே செல்லலாம். இதனையடுத்து தனிநபர் கடன் என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும். அதில் நீங்கள் கடன் பெறத் தகுதியானவர்களா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு பெயர், பிறந்த தேதி, வீட்டின் முகவரி, அலுவலக முகவரி போன்றவற்றை சரியான முறையில் குறிப்பிட வேண்டும். இதற்குப் பிறகு சில முக்கிய ஆவணங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன்பிறகு KYC சரி பார்க்கப்படும். கடைசியாக ஆதார் அடையாள அட்டை எண்ணை குறிப்பிட வேண்டும். அதன்பிறகு எல்லா விவரமும் சரியாக இருந்தால் வங்கி கடன் உறுதி செய்யப்பட்டு சேமிப்பு கணக்கில் உடனடியாக பணம் டெபாசிட் செய்யப்படும்.