அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான உங்களது ஆதார் கார்டின் புகைப்படத்தை மாற்றி, அதற்குப் பதில் வேறொரு சிறந்த படத்தைப் பயன்படுத்த விரும்பினால், தற்போது உங்களுக்கு ஆன்லைனில் இவ்வசதி வழங்கப்படுகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் உதவியுடன் ஆதார்கார்டில் பெயர், மொபைல் எண், முகவரி, பாலினம், பிறந்ததேதி மற்றும் புகைப்படத்தை மாற்றலாம். இந்த செயல்முறை குறித்து நாம் இங்கே தெரிந்துகொள்வோம்.
# ஆதார் கார்டில் புகைப்படத்தைப் புதுப்பிக்க, முதலாவதாக நீங்கள் யுஐடிஏஐ இணையதளத்துக்கு போக வேண்டும்.
# இவற்றில் ஆதார் பதிவு படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்து அருகில் உள்ள ஆதார்பதிவு மையத்திற்கோ (அ) ஆதார்சேவா கேந்திராவிற்கோ சென்று சமர்ப்பிக்க வேண்டும்.
# அதனைதொடர்ந்து ஆதார் நிர்வாகி பயோமெட்ரிக் முறையில் விபரங்கள் அனைத்தையும் சரிபார்ப்பார். அடுத்ததாக ஆதார்நிர்வாகி உங்களின் புது புகைப்படத்தை எடுப்பார்.
# அதன்பின் ஆதார்நிர்வாகி ஒப்புகைசீட்டு, புதுப்பிப்பு கோரிக்கை எண்ணை வழங்குவார். இவற்றிற்கு சேவை கட்டணமாக ஜிஸ்டியுடன் ரூபாய்.100 கட்டணமாக வசூலிக்கப்படும்.
# அதன்பின் உங்களது ஆதார்படம் புதுப்பிக்கப்படும்.